PAK vs NZ : நாங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. இதனை மட்டுமே நினைத்து விளையாடுகிறோம் – சர்பிராஸ் அகமது

உலக கோப்பை தொடரின் 33 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமை

Sarfaraz
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 33 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

Pak-vs-NZ

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நீஷம் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Babar

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது : மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களை நன்றாக வரவேற்றார்கள் அவர்களுடைய ஆதரவு இந்த போட்டியில் நன்றாக இருந்தது. பீல்டிங் முக்கியமான ஒன்றாகும் ஆனால் நாங்கள் இன்று பீல்டிங் சிறப்பாக செய்ய தவறி விட்டோம். நாங்கள் பயிற்சி செய்யும் போது கடினமாக பயிற்சி செய்தாலும் போட்டிகளில் பீல்டிங் செய்ய தவறுகிறோம்.

- Advertisement -

babar harris

எது எப்படி இருந்தாலும் என்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளோம் தற்போது வெற்றி பெறுவது மகிழ்ச்சி இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். முதலில் அமீரும் பிறகு ஷாஹின் அப்ரிடியும் சிறப்பாக பந்துவீசினார்கள் பிறகு பேட்டிங்கில் அசாம் மற்றும் ஹாரிஸ் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத்தந்தனர்.

Shaheen

மேலும், 1992 உலகக்கோப்பை மற்றும் இந்த உலகக்கோப்பை புள்ளிவிவரங்கள் ஒன்றாக உள்ளன அதனால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் என்று ஒருசிலர் தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் நான் நம்புவது கிடையாது. போட்டிக்கு போட்டி வெற்றியை மட்டுமே நினைத்து ஆடிவருகிறோம் என்று சர்பிராஸ் கூறினார்.

Advertisement