PAK vs RSA : ரொம்ப திட்டாதீங்க ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த – பாக் கேப்டன்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Sarfaraz
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.

pak vs rsa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி 309 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்த போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதாவது : எங்களது அணி வீரர்களுக்கும் வீரர்களின் குடும்பமும் இந்த தொடரில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் சில ஆட்டங்களில் நாங்கள் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூகவலைதளங்களில் எங்களைப்பற்றி கருத்துக்களை எழுதி வருகிறார்கள். எங்கள் விளையாட்டை பற்றி எழுதுங்கள் ஆனால் தனிப்பட்ட விடயங்களை எழுத வேண்டாம் மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள் என்று தெரியும்.

Pakistan

இருந்தாலும் நாங்கள் சமநிலையில் இல்லாத இந்த சூழலில் இருக்கும் பொழுது எங்களை ரொம்பவே திட்ட வேண்டாம் அதேபோன்று நான் வெற்றி பெற்றால் எங்களை அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவும் எங்களுக்கு தெரியும் இருப்பினும் ஒரு அணியாக நாங்கள் மோசமான சூழ்நிலை இருக்கும் பொழுது எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அதைவிடுத்து மீடியாவும் இணையவாசிகள் என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் எழுத வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement