டீம்ல, வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் இந்த சம்பவத்தை தான் பண்ணேன் – சர்பராஸ் கான் பேட்டி

Sarfaraz-Khan
- Advertisement -

இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் இந்திய அணிக்காக இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகினார். அப்படி தான் விளையாடிய 3 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 200 ரன்களை குவித்த அவர் தனது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து வருகிறார்.

இரட்டைசதம் அடித்ததற்கு காரணமே இதுதான் :

ஆனாலும் முன்னனி வீரர்களின் வருகை காரணமாக தற்போது அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் தனது திறனை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வங்கதேச தொடர் முடிந்த கையோடு இந்தியாவில் துவங்கிய உள்ளூர் தொடரான இராணி கோப்பை தொடரில் விளையாடிய அவர் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சி சாம்பியனான மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி சார்பாக களமிறங்கிய சர்பராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசியிருந்த சர்பராஸ் கான் கூறுகையில் :

- Advertisement -

என் தம்பி இந்த தொடரில் விளையாடி இருந்தால் எனது அப்பா மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாகவே நான் இந்த போட்டியில் விளையாடினேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இருந்தது. ஏனெனில் இந்த போட்டிக்கு முன்னதாக என்னுடைய தம்பி விபத்துக்குள்ளானார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த முடிவை வேறுயெந்த கேப்டனும் எடுத்திருக்க மாட்டாங்க – பிராட் ஹாடின் பாராட்டு

நான் இந்த போட்டியில் களமிறங்கும் முன்னரே நான் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் இரட்டை சதம் அடிப்பேன் என்று எனது குடும்பத்தாரிடமும், எனது சக அணி வீரர்களும் உறுதி அளித்திருந்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் எனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி என சர்பராஸ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement