இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் கரியரை துவங்கினார். அப்படி தான் அறிமுகமான போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் 62 ரன்கள், 68 ரன்கள் என இரண்டு அரை சதங்களை விளாசி சுனில் கவாஸ்கரின் சாதனையையும் சமன் செய்திருந்தார்.
இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய : சர்பராஸ் கான்
அதனை தொடர்ந்து இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 371 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 150 ரன்கள் குவித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனால் தொடர்ந்து அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு அதன்பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் ஆஸ்திரேலியா தொடருக்கு அடுத்து கடந்த ஓராண்டாகவே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சில வெளிப்படையான பதில்களை சர்ஃபராஸ்கான் அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ முயற்சிக்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி யோசிக்க முடியாது.
நாளைக்கு என்ன நடக்கப்போகிறது? என்பது குறித்தும் எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தீவிரமாக பயிற்சியினை செய்ய வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதையே தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இஷான் கிஷன் ஏன் நீக்கப்பட்டார்? அக்சர் படேல் ஏன் விளையாடல? டாஸின் போதே விளக்கும் கொடுத்த – இந்திய கேப்டன்
ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சரி, அதன்பின்னர் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் சரி மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



