3 ஆவது டெஸ்ட் போட்டியிலும் சர்பராஸ் கான் இடம்பிடிக்க வாய்ப்பேயில்லை – ஏன் தெரியுமா? (விவரம் இதோ)

Sarfaraz-Khan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கும் வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி எஞ்சியுள்ள தொடரில் இருந்தும் வெளியேறியதால் அவரது இடத்தில் ரஜப் பட்டிதார் தான் தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.

- Advertisement -

அதேவேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கானுக்கு அவரது இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் போட்டியின் போது காயமடைந்து வெளியேறிய கே.எல் ராகுல் இரண்டாவது போட்டியில் விளையாடாத வேளையில் தற்போது எஞ்சியுள்ள தொடருக்கான இந்திய அணியில் அவர் இணைந்துள்ளதால் தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை கே.எல் ராகுல் முழு உடற்தகுதியுடன் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தால் மீண்டும் ஒருமுறை சர்பராஸ் கானுக்கு ஏமாற்றமே மிஞ்ச காத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சர்பராஸ் கானுக்கு ஒவ்வொரு தொடரிலும் ஏமாற்றமே பரிசாக கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க : அதுக்கு கூட தகுதியில்லாத நீங்க பேசலாமா? இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இர்பான் பதான் பதிலடி

இவ்வேளையில் இந்த தொடரிலாவது அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இன்றளவும் அவரது வாய்ப்பு குழப்பத்தில் தான் உள்ளது. ஒருவேளை கே.எல் ராகுல் மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுத்தால் மட்டுமே சர்பராஸ் கானால் இந்திய அணிக்காக அறிமுகமாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement