14க்கு 15.. அடிச்சா செஞ்சுரி தான்… கம்பேக் கனவில் ரஹானேவுக்கு நேர்ந்த சோகம்.. சர்பராஸ் கான் அபாரம்

- Advertisement -

இராணி கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி லக்னோவில் துவங்கியது. அப்போட்டியில் ரஞ்சிக் கோப்பை சாம்பியனான மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதுகிறது. அதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ப்ரித்வி ஷா 4, ஆயுஷ் மாத்ரே 19, ஹர்டிக் தோமர் 0 ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

அதனால் 37-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐயர் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் அரை சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கலோல் அவுட்டானார். அடுத்ததாக வந்த சர்பராஸ் கான் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார்.

- Advertisement -

ரஹானேவுக்கு சோகம்:

அவருடன் சேர்ந்து விளையாடிய ரகானே 5வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அரை சதம் கடந்து சதத்தை நெருங்கினார். அப்போது யாஷ் தயாள் 79வது ஓவரின் மூன்றாவது பந்தை பவுன்சராக வீசினார். அதை ஆரம்பத்தில் அடிக்க நினைத்த ரகானே கடைசியில் தவிர்க்க முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக பந்து அவருடைய கிளவுஸில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது.

அதனால் 97 (234) ரன்களில் அவுட்டான ரஹானே சதத்தை நழுவ விட்டு சோகத்துடன் வெளியேறினார். ஏற்கனவே இந்திய அணியில் தம்முடைய இடத்தை இழந்துள்ள அவர் கம்பேக் கொடுப்பதற்காக போராடி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் சதத்தை நழுவ விட்டதால் அவருடைய வாய்ப்பு இன்னும் தூரம் சென்றுள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய சர்பராஸ் கான் அரை சதமடித்தார்.

- Advertisement -

சர்பராஸ் அசத்தல்:

நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாடிய அவர் 90களில் இருந்த போது கொடுத்த கேட்சை பிரசித் கிருஷ்ணா கோட்டை விட்டார். அதை பயன்படுத்திய சர்பராஸ் கான் சதமடித்து 2வது நாள் உணவு இடைவெளியில் 103* (155) ரன்களும் டானுஷ் கோட்டியான் 26* ரன்களும் எடுத்துள்ளனர். ஏற்கனவே ரஹானே, புஜாரா ஆகியோருக்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற அசத்திய சர்பராஸ் கான் இந்த சதத்தால் தம்முடைய இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தோனி ஒருத்தருக்காக தான் அந்த ரூல்ஸ்ஸையே பி.சி.சி.ஐ கொண்டு வந்தாங்க – தினேஷ் கார்த்திக், அஷ்வின் கருத்து

அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் இதுவரை 14 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ள அவர் இதையும் சேர்த்து 15வது சதத்தை அடித்துள்ளார். அதனால் அடித்தால் சதம் தான் என்ற வகையில் விளையாடி வரும் சர்ப்ராஸ் கான் இதுவரை உள்ளூர் கிரிக்கெட்டில் 75 இன்னிங்ஸில் 4286* ரன்களை 68.03 சராசரியில் குவித்து வருகிறார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது நாள் உணவு இடைவெளியில் மும்பை 338-6 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement