சென்சுரி அடித்த பின்னர் பி.சி.சி.ஐ யை திட்டினாரா சர்பராஸ் கான் – பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு

Sarfaraz-Khan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதி போட்டியில் விளையாட மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றன. அதன்படி பெங்களூருவில் கடந்த 22-ஆம் தேதி துவங்கிய இந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் டாஸ் வென்று விளையாடிய மும்பை அணியானது 374 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வரும் மத்திய பிரதேச அணியானது ஒரு விக்கெட்டை இழந்து 123 ரன்கள் குறித்துள்ளதால் 251 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் வழக்கம் போலவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் 243 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 134 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் டான் பிராட்மனுக்கு அடுத்ததாக முதல் தர கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்திருப்பவராக மீண்டும் சர்பராஸ் கான் தனது பெயரினை உலகிற்கு உரக்க சொல்லியுள்ளார் என்று கூறவேண்டும்.

- Advertisement -

இதுவரை 23 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 80.42 சராசரியுடன் ரன் மழை பொழிந்து வருகிறார். இதுவரை அவர் 23 முதல்தர போட்டிகளில் விளையாடி 2288 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக முதல் தர கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் சதம் அடித்த பிறகு தனது கொண்டாட்டத்தை முதலில் கண்கலங்கியபடி வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அதன் பிறகு பெவிலியனை நோக்கி ஏதோ கோபத்துடன் கத்தினார். அவர் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் பி.சி.சி.ஐ மற்றும் தேர்வு குழு ஆகியோரை விமர்சித்து தான் இது போன்று ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளாரோ என்று சிலர் இந்த வீடியோவினை பகிர்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் வழக்கம் போலவே ரஞ்சித் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தனது மகிழ்ச்சியை மிகவும் ஆக்ரோஷமாகவே வெளிப்படுத்தியுள்ளார் என்று சிலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது இந்த ஆக்ரோஷமான செஞ்சுரி கொண்டாட்டம் தற்போது இணையத்தில் பெருமளவு பேசப்பட்டு வரும் விடயமாக மாறி வருகிறது.

இதையும் படிங்க : ஜாஸ் பட்லரின் அதே ஸ்டைலை பாலோ பண்ணேன். ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டியில் அசத்திய – இளம்வீரர்

அதோடு 24 வயதான மும்பையைச் சேர்ந்த இந்த இளம் வீரரான சர்பராஸ் கான் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக தற்போது கருத்துக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement