
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்ட அவர் 2022 முதல் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது.
மேலும் ரோஹித் சர்மா தலைமையில் ஜெய்ஸ்வால், சரர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் அறிமுகமாகி அசத்தி வருகிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட்டைப் பற்றிய லகான் எனும் பிரபல பாலிவுட் திரைப்படத்தில் வரும் அமீர் கான் போல ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதாக சர்பராஸ் கான் வித்தியாசமான பாராட்டு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரோஹித் சர்மா தங்களைப் போன்ற வீரர்களுக்கு சமமான வாய்ப்பு கொடுப்பதாக தெரிவிக்கும் சர்பராஸ் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “அவர் வித்தியாசமானவர். அனைவரையும் கச்சிதமாக உணர வைப்பார். ரோஹித் சர்மா பெரிய சகோதரரை போன்றவர். அவரின் கீழே நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறோம்”
“முதலில் அவரை நாங்கள் வெளியிலிருந்து பார்த்தோம். தற்போது அவரின் கீழ் விளையாடும் அனுபவத்தை பெறுகிறோம். அவர் ஜூனியர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்துகிறார். லகான் எனக்கு பிடித்த திரைப்படம். அந்தப் படத்தில் அமீர் கான் அணியை உருவாக்கியதை நான் பார்த்துள்ளேன். அந்த அமீர் கான் போல ரோஹித் சர்மா இந்திய அணியில் உள்ளார்” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் மற்றொரு இளம் வீரர் துருவ் ஜுரேல் பேசியது பின்வருமாறு. “தொலைக்காட்சியில் நாங்கள் ரோகித் சர்மாவை பார்த்த போது பலரும் அவருடைய ஷாட்டுகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அதை அருகில் இருந்து பார்க்கும் போது அந்த பந்துகள் உங்களை எந்தளவுக்கு தடுமாற வைக்கும் என்பதை உணர முடிகிறது”
இதையும் படிங்க: மத்தவங்க மாதிரி விராட் கோலிக்கு அதெல்லாம் தேவையில்ல.. 2024 டி20 உ.கோ தான் அதுக்கு சாட்சி.. பியூஸ் சாவ்லா
“இருப்பினும் ரோஹித் சர்மா அதை எளிதாக ரசிகர்கள் கூட்டத்தில் அடிக்கிறார். அவருடைய ஃபுல் ஷாட் மிகவும் பிரபலம். தற்போது அதை அருகில் இருந்து பார்ப்பது மிகவும் ஸ்பெஷல். அவர் கோட் (கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்)” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கே