
பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்து அசத்தியது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதன் பின் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி – சர்பராஸ் கான் ஆகியோர் நங்கூரமாக விளையாடினர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் விராட் கோலி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சர்பராஸ் கான் அரை சதம் கடந்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தார். அவருடன் நான்காவது நாளில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு நியூசிலாந்தை சிறப்பாக எதிர்கொண்டார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது காயத்தை சந்தித்த அவர் மேற்கொண்டு பேட்டிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியாவுக்காக முதலுதவிகளை எடுத்துக்கொண்ட ரிஷப் பண்ட் முழங்காலில் கட்டுகளை போட்டுக்கொண்டு பேட்டிங் செய்ய வந்தார். அந்த வைராக்கியத்துடன் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய அவர் வேகமாக ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சர்பராஸ் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவை தலை நிமிர வைத்தார்.
அதே போல ரிஷப் 5 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்தார். தொடர்ந்து அசத்திய அந்த 5 ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த போது மழை வந்தது. அதனால் நான்காவது நாள் உணவு இடைவெளியில் 344-3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 12 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. களத்தில் சர்பராஸ் கான் 125*, ரிஷப் பண்ட் 53* ரன்களுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: உங்கள ஊர்ல இருந்துகிட்டே விளையாடலாம்.. புதிய ஐடியாவுடன் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை கடிதம்
இந்த 53 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 25000 ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை உடைத்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இது போக ஏற்கனவே அவர் வேகமாக 500, 1000, 1500, 2000 ரன்கள் குவித்தவராகவும் சாதனை படைத்துள்ளார். வேகமான 2500 ரன்கள் சாதனைப் பட்டியல்:
1. ரிஷப் பண்ட்: 62 இன்னிங்ஸ்*
2. எம்எஸ் தோனி: 69
3. ஃபாரூக் இன்ஜினியர்: 82
4. சயீத் கிர்மனி: 116