தோனியை போல செய்ய நினைத்து அசிங்கப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்..! வீடியோ உள்ளே

Dhoni

ஜிம்பாபேவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடிய வந்தது. இதில் பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைபற்றியது. இந்த தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் கீப்பரான தோனியை பின்பற்றுவதாக நினைத்து பந்து வீசி முக்குடைத்துக் கொண்டார்.

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 6 ஓவர்களை வீசியுள்ள தோனி 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். தோனியை போலவே தானும் பந்து வீசி விக்கெட் எடுத்து விடலாம் என்று எண்ணி ஜிம்பாபேவிற்கு எதிரான 5 வது ஒரு நாள் போட்டியில் பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான ஷார்ஃராஸ் அகமது இரண்டு ஓவர்களை வீசினார்.

ஆனால் , இரண்டு ஓவர்களை வீசியும் அவரால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை, அதற்கு மாறாக இரண்டு ஒவர்களுக்கு 15 ரன்களை கொடுத்தார். அதிலும் ஷார்ஃராஸ் அகமது வீசிய பந்தில் ஜிம்பாபே அணியின் பீட்டர் மோர் சிக்ஸ் ஒன்றை விளாசினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.