PAKISTAN : சரியாக விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் திரும்ப முடியாது – பாக் கேப்டன்

நடந்து வரும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக

Sarfaraz
- Advertisement -

நடந்து வரும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன.

ind pak

இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது அந்த அணியின் வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : கசப்பான தோல்விகளை மறந்து இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தாருங்கள் என்றும், இனிவரும் நான்கு போட்டியில் ஜெயித்தால் மட்டுமே நாம் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கும்.

- Advertisement -

இல்லையெனில் இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்து பாதுகாப்பு வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்ல முடியாது. மக்களின் எதிர்ப்பை சந்திப்போம் மேலும் மக்களின் விமர்சனங்களுக்கும், வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். எனவே இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

WI-vsPAK

இந்த மோசமான ஆட்டத்தை மறந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடுமாறு அவர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதில் குறிப்பு என்னவென்றால் இனி வரும் போட்டிகளில் நான்கில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்றால் கூட அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு ஏனெனில் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement