நாங்கள் 500 ரன்கள் எடுத்து அசத்துவோம். பாக் கேப்டன் அதிரடி பேச்சு

Sarfaraz
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.

pak vs ban

இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால் 11 புள்ளிகளை எட்டும் ஆனால் நியூசிலாந்தும் 11 புள்ளிகளில் இருப்பதால் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து செமி பைனல் தகுதி பெறும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு அறிய வாய்ப்பு மட்டும் தான் உள்ளது.

- Advertisement -

அது யாதெனில் இன்றைய போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 316 எங்களுக்கும் அதிகமான ரன் வித்தியாசத்தில் வங்கதேச வீழ்த்தினால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது 400 பாகிஸ்தான் எடுத்தால் 84 ரன்களுக்குள் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். 350 ரன்கள் எடுத்தால் 38 ரன்களில் வங்கதேச அணியை வீழ்த்த வேண்டும் அப்படி நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

Sarfaraz

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடர் முழுவதும் நாங்கள் நன்றாக ஆடினோம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி வரும் நோக்கத்துடனேயே விளையாடி வருகிறோம். இந்த போட்டியில் நாங்கள் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற முயற்சிப்போம். 500 ரன்கள் குவித்து வங்கதேசத்தை 50 ரன்களுக்கு சுருட்டிய முயற்சிப்போம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் அசாத்தியமான நம்பிக்கையுடன் பேட்டி அளித்தார்.

Advertisement