WI vs PAK : பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் என்றால் இதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது – சர்பிராஸ் கான்

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

Sarfaraz
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

gayle

போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது : இந்த மைதானத்தில் டாஸ் தோற்றது எங்களுக்கு முதல் அடி. ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் முதலில் விக்கெட்டை இழந்தால் பிறகு அதிலிருந்து மீள்வது கடினம். எங்களது பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பிட்ச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

WI-vsPAK

பேட்ஸ்மேன்களின் இந்த பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம். முஹமது அமீர் சிறப்பாக பந்துவீசினார். இங்கிலாந்து மைதானத்தில் அவர் எப்போதுமே சிறப்பாக வீசிவருகிறார் என்று சர்பிராஸ் அஹமது கூறினார்.

Advertisement