இந்திய அணி மீது எந்த தவறும் இல்லை. அப்படி பேச கூடாது – சர்பிராஸ் அகமது

Sarfaraz
Advertisement

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

jadeja

உலக கோப்பை லீக் சுற்றுகளில் முடிந்ததையடுத்து பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் சென்று அடைந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்த சர்ப்ராஸ் அகமது கூறியதாவது : இந்திய அணி வேண்டும் என்றே இங்கிலாந்து அணியிடம் தோற்றதாக நான் நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானது அல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றது.

- Advertisement -

எனவே இந்தியா மீது எந்த குற்றமும் கிடையாது. பாகிஸ்தான் அணி வெளியேறியதற்கும், இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதைப் பற்றி பேசுவது தவறான விடயம் என்று உருக்கமாக சர்ப்ராஸ் அகமது கூறினார். மேலும் லீக் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் மட்டுமே இந்தியா தோற்றது.

Jadhav

அப்போது இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை பெற்றிருக்கும் எனவே இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணி குறித்து விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement