என்னது இவரையா ஷு தூக்கிட்டு போக வச்சீங்க. ஜூஸ் பாட்டல் வேறயா ? – கொதித்தெழுந்த முன்னாள் வீரர்

Sarfaraz-1
- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்று வீரராக சர்பராஸ் அகமத் விளையாடி வருகிறார். இவர் வேறு யாருமில்லை கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியவர் தான்.

Naseem

- Advertisement -

உலகக் கோப்பைத் தொடரின் படு தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் அணிக்கு இடம் பிடித்த அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இவர் தற்போது முதல் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தேவையான ஷு மற்றும் ஜூஸ் பாட்டிலை கையில் ஏந்தி மைதானத்திற்குள் சென்றார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sarfaraz 2

மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் இது குறித்து விமர்சித்து வரும் வரையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷுத் இதுபோன்று சர்பராஸ் கான்க்கு அவமரியாதை கொடுத்திருக்கக் கூடாது. “இது நடந்திருக்கவே கூடாது. இது டீம் ஸ்பிரிட் அல்ல” என்று தனது கருத்தினை முன்வைத்துள்ளார் சர்பராஸ் அகமத்.

Sarfaraz

மேலும் முன்னாள் வீரரான அக்தரும் இந்த விடயத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். சர்பராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் டிராபி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement