கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கருதப்படுகிறார். அவர் உலகின் மிக சிறந்த கீப்பரா இல்லையா என்ற விவாதத்தை தாண்டி, அவரின் ஸ்டம்பிங் திறன் மின்னல் வேகத்தில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நிலையில் தற்போது பெண் தோனி என்று இங்கிலாந்து மகளீர் அணியில் உள்ள சாரா டைய்லரை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து மகிளீர் அணியில் உள்ள சாரா டைய்லர் அந்த அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். இந்நிலையில் தென்னாபிரிக்கா மகளீர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டது. நேற்று(ஜூன்10) இங்கிலாந்தில் உள்ள ஓர்ச்செஸ்டெரில் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளீர் அணி 50 ஒவர்கள் முடிவில் 189 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க மகளீர் அணி 45.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லீ 92 ரன்களை குவித்து ஆட்டமிழகாமல் இருந்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து மகளீர் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் சாரா டைய்லர், தென்னாபிரிக்க வீராங்கனியான சுண் லூஸ் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து கைப்பற்றிய விதம் அணைவரையும் கவர்ந்தது. சுண் லூசின் விக்கெட்டை கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் பெண் தோனி என்று லாரா டைய்லரை பாராட்டி வருகின்றனர்.