கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கருதப்படுகிறார். அவர் உலகின் மிக சிறந்த கீப்பரா இல்லையா என்ற விவாதத்தை தாண்டி, அவரின் ஸ்டம்பிங் திறன் மின்னல் வேகத்தில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நிலையில் தற்போது பெண் தோனி என்று இங்கிலாந்து மகளீர் அணியில் உள்ள சாரா டைய்லரை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
JUST IN: Triple world champion Sarah Taylor has announced her retirement from international cricket.
Congratulations on a stellar career ???? pic.twitter.com/3jONmZCndC
— ICC (@ICC) September 27, 2019
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டைலர். 30 வயதாகும் இவர் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென்று அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு முடிவினை அறிவித்தார்.
இதுவரை சாரா டெய்லர் இங்கிலாந்து அணிக்காக 126 ஒருநாள் போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 90 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்து. ஏற்கனவே இவர் தனது நிர்வாணப்புகைப்படத்தை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.