நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறாததற்கு இதுவே காரணம்- பாக் கேப்டன் வருத்தம்

Sarfaraz
- Advertisement -

உலக கோப்பை தொடரில் 43 வது லீக் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையான பாகிஸ்தான் அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

pak vs ban

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 100 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

பின்னர் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 44.1 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் அடித்தது. சாகிப் 64 ரன்களை அடித்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Shaheen-Afridi

போட்டி முடிந்து சர்ஃப்ராஸ் அகமது கூறியதாவது : கடைசி நான்கு போட்டிகளில் நாங்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இருந்தாலும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது வருத்தமளிக்கிறது. இந்திய அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்வியே இந்த தொடர் இழப்புக்குக் காரணம் எங்களது வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எங்கள் அணியில் ஷாகின்ஷா மற்றும் ஹாரிஸ் ஆகியோர் வந்த பிறகு அணி பலமாக மாறியது. இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது வருத்தம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கேப்டன் கூறினார்.

Advertisement