இந்திய அணி இன்னைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்க இவரே காரணம் – சக்லைன் முஷ்டாக் ஓபன்டாக்

Mushtaq-3

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்து விளையாடி வரும் பல வீரர்கள் தங்களது அசாத்திய திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, இந்திய கிரிக்கெட் அணியானது உலகிலேயே மிகப்பெரும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள ரோஹித் சர்மா, கோஹ்லி, ஜடேஜா என பல வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்க, அவர்களுக்கு இணையான திறமையை வைத்துக் கொண்டுள்ள இன்னும் பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் அணிகளை உருவாக்கும் அளவிற்கு இந்தியாவில் திறமைவாய்ந்த வீரர்கள் இருப்பதை கண்டு மற்ற அணிகளே வியப்படைகின்றன. இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தியதற்கு காரணமாக விளங்கும் இந்திய பேட்ஸ்மேன்களின் பயமில்லாத ஆட்டத்திற்கு, இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த வீரேந்திர சேவாக்தான் முழுக் காரணம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான சாக்குலைன் முஷ்டாக்.

- Advertisement -

இந்திய அணி குறித்தும், வீரேந்திர சேவாக் பற்றியும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் அவர். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, வீரேந்திர சேவாக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் உலக கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களும் அவரின் அதிரடி பாணியால் பயனடைந்துள்ளனர்.

Sehwag

இந்த உலகத்திற்கு காட்டிய அவருடைய அதிரடியான பேட்டிங்தான் இந்திய கிரிக்கெட்டின் மனநிலையையும், அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களின் மனநிலையையும் மாற்றியது என்று கூறிய அவர், கிரிக்கெட் ஜாம்பவானான சர் விவியன் ரிச்சர்ட்ஸின் அணுகுமுறையும், வீரேந்தீர சேவாக்கின் அணுகுமுறையும் ஒரே மாதியானதாக இருக்கும் என்றும் பாராட்டினார். அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், ரோஹித் சர்மாவின் ரெக்கார்டுகள் வீரேந்திர சேவாக்கின் ரெக்கார்டுகளை விட நன்றாக இருக்கலாம், ஆனால் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்திற்கு காரணமாக சேவாக் தான் இருக்கிறார். அவர் தன்னுடைய நாட்டிற்காக விளையாடினார்.

- Advertisement -

Sehwag

அவருடைய ஆட்டமானது அவருக்குப் பின் வந்த வீரர்களின் மனநிலையையும் மாற்றியது எனவும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்ந்த சேவாக்கின் ஸ்ட்ரைக் ரேட், டெஸ்ட் போட்டிகளில் 82.2 ஆகவும், ஒரு நாள் போட்டிகளில் 104.3 ஆகவும் இருக்கிறது. மேலும் டி20 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 145.3 ஆக இருக்கிறது.

Advertisement