உள்நாட்டு புலியான அஷ்வினை விட இவரே சிறந்த பந்துவீச்சாளர் – சையத் முஷ்டாக் பேட்டி

Mushtaq
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாக் தற்போது பாகிஸ்தான் சர்வதேச வீரர்கள் முன்னேற்றத்திற்கான தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியின் பவுலிங் கோச்சாகவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது உலகின் சிறந்த பந்துவீச்சாளரை தேர்வு செய்துள்ளார்.

Mushtaq 2

- Advertisement -

இந்நிலையில் தற்போது உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்த வீரர் என்பது குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் உள்நாட்டு போட்டிகளில் அதாவது சொந்த மண்ணில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை விட யாராலும் சிறப்பாக பந்து வீச முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து கூறுகையில் : அஸ்வின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அசத்தி வருகிறார். வெளிநாட்டு மண்ணிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டது வருகிறார். ஆனால் சொந்த மண்ணில் அவரை விட சிறந்த பந்துவீச்சாளர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Ashwin

அதேபோன்று ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதேவேளையில் அஸ்வினை விட ஆஸ்திரேலிய வீரரான நாதன் லயன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

lyon 2

அவரது பந்துவீச்சு மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது தற்போதைய நிலையில் அவர் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement