அம்பயரை பலமாக தாக்கிய நியூசிலாந்து வீரர். இப்படியா பண்ணுவீங்க – வைரலாகும் வீடியோ

aleem dar

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடந்து முடிந்தது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

nz

இந்த போட்டியில் விளையாடியாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 166 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய 217 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய நியூசிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 296 ரன்கள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அம்பயர் அலீம் தாரை நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் இடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது பீல்டர் ஒருவர் ஸ்டம்பை நோக்கி த்ரோ அடிக்க ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அம்பயர் நோக்கி பந்து வந்தது அதனை பிடிக்க ஓடிவந்த சாண்ட்னர் தவறி அம்பயர் அலீம் தார் மீது எதிர்பாராவிதமாக பலமாக மோதினார்.

இதனால் அவரின் கால் முட்டியில் பலமான அடி விழுந்தது உடனே கண்கலங்கியபடி கீழே விழுந்த அலீம் தார் சற்று நேரம் உட்கார்ந்தே இருந்தார் அதன் பின்னர் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு காலில் பேண்டுடன் அவர் அம்பயர் செய்ய தொடர்ந்தார். அலீம் தார் இதுவரை 207 ஒருநாள் போட்டிகளுக்கும், 46 டி20 போட்டிகளுக்கும் அம்பயரிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -