இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
இறுதிப்போட்டியில் சாதனை நிகழ்த்திய சஞ்சு சாம்சன் :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களையும் குவித்தனர். பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடியிருந்த சஞ்சு சாம்சன் 46 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் கேன் வில்லியம்சன் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோரது சாதனையை கடந்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களாக மார்லன் சாமுவேல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் 85 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரமாண்ட பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
இவ்வேளையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரராக தனது பெயரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



