IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட இவரே சரியானவர் – முன்னாள் வீரர் ஆதரவு

Sanju-Samson
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்தியா ஒருவார இடைவெளிக்குப் பின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியினர் தனி விமானம் வாயிலாக அங்கு சென்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் ஓய்வெடுக்கும் என்ற தொடருக்கு ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

INDvsZIM

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இதேபோல் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரிலும் இருப்பதால் நல்ல புத்துணர்ச்சியுடன் பார்மில் இருக்கும் இந்தியா கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த வாரம் வங்கதேசத்தை சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சாய்த்த ஜிம்பாப்வே அந்த புத்துணர்ச்சியுடன் இந்தியாவுக்கு சவால் கொடுக்க தயாராகி வருகிறது.

- Advertisement -

விக்கெட் கீப்பர்:
முன்னதாக இந்த தொடரில் சீனியர்கள் இல்லாததால் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் போன்ற முதன்மை விக்கெட் கீப்பர்கள் இல்லாததால் இஷான் கிசான் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாராவது ஒருவர் கீப்பராக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபிஎல் தொடரில் தடுமாறிய இஷான் கிசான் அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஓரளவு நல்ல பார்மில் இருக்கிறார்.

Sanju Samson

மறுபுறம் காலம் காலமாக தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாமல் போனால் போகிறது என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் சமீபத்திய அயர்லாந்து தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார். எனவே இந்த இருவரில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் இஷான் கிஷனை விட சஞ்சு சாம்சன் முதல் விக்கெட் கீப்பராக தேர்வாக தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் மணிந்தர் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

திறமையான சஞ்சு:
சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் சூப்பர் மேனைப் போல தாவிப் பிடித்து இந்தியா திரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கும் மணிந்தர் சிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த இருவருமே (சஞ்சு & இஷான்) மிகச் சிறந்த வீரர்கள் என்பதால் அவர்களில் முதல் தேர்வு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடினமான ஒன்றாகும். இருப்பினும் நான் சஞ்சு சாம்சனை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் பெரும்பாலும் பேக் புட்டில் பேட்டிங் செய்யும் அவரிடம் பந்தை எதிர்கொள்ள தேவையான அதிகப்படியான நேரங்கள் உள்ளது”

Maninder

“எனவே அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதில்லை என்று யோசிப்பதற்கு முன்பாக சஞ்சு சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தாலேயே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தடுமாறுகிறார். எனவே இந்த தொடரில் எனது பார்வை அவரின் மீது உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 2015இல் இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமான சஞ்சு சாம்சன் தனது 2வது போட்டியை 5 வருடங்கள் கழித்து விளையாடினார் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். ஆனால் முன்பைவிட ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு திறமையான வீரராக நிரூபித்த பின்பும் கூட 7 வருடங்கள் கழித்தும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காதது நிறைய ரசிகர்களை இப்போதும் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க : அஷ்வின் சிறப்பா ஆடுறாரு. ஆனாலும் டி20 உ.கோ டீமில் தேவையில்லை – காரணத்தை கூறும் முன்னாள் வீரர்

எனவே இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முழுமையாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே மணிந்தர் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement