இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத அவருக்கு கடைசியாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
கவுதம் கம்பீரை முந்த காத்திருக்கும் சஞ்சு சாம்சன் :
அப்படி ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த அவர் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அணிக்கு தேவையான முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்து வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வந்தார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி துரத்திய வேளையில் சஞ்சு சாம்சனால் 17 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இருந்தாலும் இனி வரும் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் இன்னும் சஞ்சு சாம்சனுக்கு இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரை தாண்டி மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 46 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 930 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் அவர் 70 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 1000 ரன்களை கடக்கவுள்ளார்.
இதையும் படிங்க : ஒரு விக்கெட் கூட எடுக்க முடியல.. பேச்சு புலி பாகிஸ்தானுக்கு இந்தியா செயலில் கொடுக்கும்.. ஹர்பஜன் ஓப்பன்டாக்
அதேவேளையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 37 டி20 ஆட்டங்களில் விளையாடி 932 ரன்களை குவித்திருக்கும் வேளையில் அவரை கடக்க இன்னும் சஞ்சு சாம்சனுக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை இந்த மூன்று ரன்களை அவர் வெகு எளிதாக தாண்டி செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.



