
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது அந்த அணியின் நிர்வாகத்திடம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு கடந்து சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அந்த அணி இம்முறை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ரியான் பராக்கை கேப்டனாக முன்னிலைப்படுத்தி வருவதால் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறி மினி ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் எடுக்கப்போகிறது என்றும் அதற்காக தற்போது ஆர்.ஆர் அணி அவர்களிடம் நிபந்தனைகளை வைத்து வருவதாகவும் சில தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்து சி.எஸ்.கே அணிக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் அதனை சிஎஸ்கே அணி நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வரவேண்டும் எனில் சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரில் இருவர் எங்களது அணிக்கு வரவேண்டும் என்று ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ராஜஸ்தான் அணி வைத்த அந்த கோரிக்கையை சிஎஸ்கே அணி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் சஞ்சு சாம்சனை நாங்கள் மினி ஏலத்தில் வாங்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஐபில் தொடருக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியில் இருந்து பல வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் செஞ்ச அந்த அவமதிப்பு.. இந்திய அணியில் ஸ்பார்க்கை உண்டாக்குச்சு.. சுந்தர் பேட்டி
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஷ்வின், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேவான் கான்வே போன்ற முக்கிய வீரர்களை வெளியேற்றி அவருக்கு பதிலாக மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க முயற்சிக்கும் என்று தெரிகிறது.