பழைய அணியாக இருந்தாலும் விடமாட்டேன்.. ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடுவது குறித்து – சஞ்சு சாம்சன் கருத்து

Sanju Samson RR
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனப் கசப்பு காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார். இப்படி சஞ்சு சாம்சன் ஒரு முடிவை எடுத்ததும் அவரை ஏலத்திற்கு முன்னதாக தங்களது அணிக்குள் கொண்டு வர பல்வேறு அணிகள் முயற்சி செய்தன. அந்த போட்டியின் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு விட்டு கொடுத்து டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி கொண்டு வந்தது.

பழைய அணியாக இருந்தாலும் விட மாட்டேன் : சஞ்சு சாம்சன்

இதன் காரணமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாட இருக்கிறார். தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவருக்கு சரியான மாற்றுவீரராக சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக தோனிக்கு அடுத்து சென்னை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக சஞ்சு சாம்சனே இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தான் வெளியேறிவதற்கான காரணத்தையும், அந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறித்தும் சில கருத்துக்களை சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் என்னுடைய காலம் முடிந்து விட்டதாக நான் முழுமையாக உணர்ந்தேன். அதனால் தான் அந்த அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்து புதிய பயணத்தை துவங்கியுள்ளேன். எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நான் விளையாட இருக்கிறேன். இப்படி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் மைதானத்திற்குள் நான் நுழைந்த பிறகு உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இந்த ஐ.பி.எல் தொடரில் இதை செய்யனும்.. இல்லனா அது நியாயமா இருக்காது – ஏ.பி.டி கருத்து

என்னுடைய பழைய அணியாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரது மீதும் எனக்கு மிகப்பெரிய அன்பும், மரியாதையும் உண்டு. அவர்களுடன் நான் பல ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம் இருக்கும். ராஜஸ்தான் அணியில் எனது காலம் முடிந்துவிட்டது. தற்போது சிஎஸ்கே அணியுடன் புதிய பயணத்தை துவங்கி இருக்கிறேன் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement