இந்திய அணியில் எனக்கு மட்டுமல்ல இளம்வீரர்கள் அனைவருக்குமே இவர்தான் ரோல்மாடல் – மனம்திறந்த சஞ்சு சாம்சன்

Samson-1
- Advertisement -

இந்திய அணியில் தோனிக்கு பிறகு அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற எதிர்பார்ப்பும், தேடலும் பல மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியிலும், இந்திய அணி தேர்வு குழுவினர் மத்தியிலும் நிலவி வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்க இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் அறிமுகமானபோது அவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தாலும் அதன் பின்னர் பல தொடராக சொதப்பி வருகிறார்.

samson

- Advertisement -

அதன் காரணமாக தற்போது அணியில் இருந்து அவர் தற்காலிகமாக களமிறக்கப்படாமல் வெளியில் அமர வைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த வெற்றிடத்திற்கு சஞ்சு சாம்சன் கடுமையான போட்டியை அளித்து வருகிறார். பண்ட் மற்றும் சாம்சன் ஆகிய இருவருக்கும் இடையே விக்கெட் கீப்பர் யார் என்பதில் சரிசமமான போட்டி நிலவுகிறது. இருவரும் தனக்கென தனி பாணியும், திறமையும் கொண்டவர்கள்.

ஆனால் ரிஷப் பண்டிற்கு கிடைத்த அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் தனக்கான இடம் குறித்தும், கேப்டன் விராட்கோலி குறித்தும் அவர் சில தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Kohli-1

ஓய்வு அறையில் இருக்கும்போது விராட்கோலி பல அறிவுரைகளை வழங்குவார். உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது, பேட்டிங் நுணுக்கங்கள், விக்கெட் கீப்பராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயன்தரக்கூடிய பலவிதமான ஆலோசனைகளை அவர் தனக்கு வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

முதல்முறையாக விராத் கோலியுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது கோலி மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார். மேலும் அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. வேலை நேரங்களில் மட்டும்தான் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். மற்ற வகையில் அணி வீரர்களுடன் இருக்கும்போது புன்னகையுடன் தான் அவர் பழகுவார்.

Samson

கோலியை சுற்றி நாம் இருக்கும்போது கிரிக்கெட் பற்றி நிறைய விடயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டே தான் இருப்போம். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது உடல் ஆரோக்கியம், பேட்டிங் நுனுக்கம் தொடர்பாகவும் நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றும் எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்ற இளம்வீரர்கள் பலருக்கு கோலிதான் ரோல்மாடல் என்று சாம்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement