எங்கள் அணியின் தொடர் தோல்விக்கு இதுவே காரணம். வேற எதும் இல்ல – சஞ்சு சாம்சன் வருத்தம்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி டெல்லி மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்களும், பட்லர் 41 ரன்களும் குவித்தனர். மும்பை அணி சார்பாக ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

sanju

அதனை தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் குவிண்டன் டிகாக் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் வெற்றியை நோக்கி விரைவாக சென்றது.

- Advertisement -

வெற்றிக்கு மிக அருகில் க்ருனால் பாண்டியா 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற டிகாக் 70 ரன்களுடனும், பொல்லார்ட் 16 ரன்களுடனும் களத்தில் இருந்து போட்டியை முடித்துக்கொண்டு கொடுத்தனர். இறுதியில் மும்பை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்து மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

dekock

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : நிச்சயம் நாங்கள் இந்த மைதானத்தில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டோம். பந்து நன்றாக பேட்டுக்கு வந்தும் எங்களால் இறுதியில் ரன்களை குவிக்க முடியவில்லை. பவுலர்கள் தங்களது வேலையை கச்சிதமாக செய்தனர் .ஆனால் பேட்ஸ்மேன்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்ய முடியவில்லை.

dekock 1

மும்பை போன்ற அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எடுத்தால்தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை வீழ்த்திவிட்டனர். இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பேட்டிங்கில் ஏற்பட்ட குறைபாடே காரணம் என பேட்ஸ்மேன்கள் மீது குறை கூறி சஞ்சு சாம்சன் வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement