கடைசி பந்தில் நான் நினைத்தது இதுதான். ஆனா ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சி – தோல்விக்கு பிறகு சாம்சன் வெளிப்படை

samson
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

rrvspbks

இந்த போட்டியில் இறுதி ஓவரின் கடைசி பந்து வரை வெற்றிக்கான வாய்ப்பு இரு அணிகளுக்குமே சமமாக இருந்தது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் சஞ்சு சாம்சன் இறுதி பந்தை தூக்கி அடிக்க அது லாங்ஆப் திசையில் நின்றுகொண்டிருந்த தீபக் ஹூடாவின் கைகளுக்கு சென்றது. கடைசி பந்தியில் ஆட்டமிழந்து சாம்சன் வெளியேற இந்த பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்தப் போட்டியைப் பற்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த போட்டி மிகவும் க்ளோசான போட்டியாக அமைந்தது. இறுதி வரை நாங்கள் வெற்றிக்கு அருகில் நெருங்கி அதிர்ஷ்டமின்றி இந்த போட்டியில் தோற்று விட்டோம்.

Samson-1

இதைவிட நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. கடைசி பந்தினை சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று தான் நான் சரியாகவே டைமிங் செய்தேன். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டவில்லை இருப்பினும் இதுபோன்ற போட்டிகளில் இது சாதாரணமான ஒன்றுதான். இந்த போட்டியில் இந்த டார்கெட் என்பது இந்த மைதானத்தில் சேசிங் செய்யக் கூடிய ஒன்றுதான்.

samson

இந்த போட்டியில் தோற்றது சற்று வருத்தமாகவே இருந்தாலும் எங்கள் அணியின் வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement