மிடில் ஓவரில் நாங்கள் செய்த இந்த தவாறே சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – சாம்சன் பேட்டி

samson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 33 ரன்களையும், ராயுடு 27 ரன்களை குவித்தனர்.

csk vs rr

- Advertisement -

சென்னை அணி வீரர்கள் யாருமே பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை என்றாலும் களமிறங்கிய அனைவரும் கணிசமான ரன் குவிப்பை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது அதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் மனன் வோரா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை அடுத்தடுத்து இழந்த நிலையில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் 12 ஆவது ஓவரில் பட்லர் மற்றும் துபே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த ஓவரை வீசிய ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுத்தார். அதன் பின்னர் வந்த யாரும் பெரிய அளவு ரன் குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று பெற்று அசத்தியுள்ளது.

buttler

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த இலக்கு சேசிங் செய்ய கூடிய ஒரு இலக்கு தான். இருப்பினும் நாங்கள் மிடில் ஓவரில் விரைவாக சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள். இருப்பினும் அவரது அவர்களது பேட்டிங் வரிசை மிக நீண்டு உள்ளதால் 10 முதல் 15 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். இந்த மைதானத்தில் டர்ன் இருப்பதை நாங்கள் நினைக்கவில்லை. மைதானத்தில் பனிப்பொழிவும் இல்லை என்பதால் பந்து பேட்டுக்கு வரவில்லை. இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது.

moeen ali

எனது பேட்டிங்கில் நான் விரைவில் ஆட்டம் இழந்து விட்டேன். இன்னும் சில டெக்னிக்குகளை நான் பேசிக்காக பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த போட்டியில் தோல்வி பெற்றது மூலம் நாங்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். அது மட்டுமின்றி பல விடயங்களும் எங்களுக்கு புரிய வந்தது அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம் என்று சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement