வெளியில் உட்காந்து பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. ராஜஸ்தான் அணிக்கு கம்பேக் கொடுப்பது பற்றி – சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களை காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தவறவிட்டார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக ரியான் பராக் தலைமையில் விளையாடிய அந்த அணி முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியை சந்தித்தது. பின்னர் மீண்டும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பி இருந்தாலும் ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக மறுபடியும் இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

வெளியில் அமர்ந்து இதை பார்க்க கஷ்டமா இருந்தது : சஞ்சு சாம்சன்

பின்னர் மீண்டும் ரியான் பராக் தலைமையில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 லீக் ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடம்பிடித்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது.

- Advertisement -

அந்த அணிக்கு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் இருக்கும் வேளையில் தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் காயம் காரணமாக வெளியில் அமர்ந்திருந்த போது ராஜஸ்தான் அணியின் தோல்வி எப்படி தன்னை பாதித்தது என்பது குறித்தும் மீண்டும் தான் விளையாட இருப்பது குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகியில் : நான் காயம் குணமடைந்து தற்போது உடற்தகுதியிலும் தேர்ச்சி பெற்று விட்டேன். எனவே கம்பேக் கொடுத்து விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். காயம் அடைந்து வெளியில் அமர்ந்திருக்கும் போது ராஜஸ்தான் அணி என் கண் முன்னே தோல்வி அடைவதை பார்க்கும் போது மிகவும் விரக்தியாக இருந்தது.

- Advertisement -

வெளியில் அமர்ந்து போட்டிகளை பார்ப்பது என்பது மிக கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. முக்கியமான பல போட்டிகளை நான் காயத்தால் தவறவிட்டு விட்டேன். இந்த தொடரில் ஒரே பந்தில் போட்டியின் முடிவுகள் மாறும் என்பதை கடந்த நான்கு-ஐந்து போட்டிகளாக பார்த்து விட்டோம். இந்த தோல்விகளை பார்க்கும்போது அது என்னை மிகவும் பாதித்தது.

இதையும் படிங்க : நடப்பு சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிய மழை.. சிஎஸ்கே, மும்பையின் சாதனையை தவற விட்ட கொல்கத்தா

ஒரு தொடரில் ஒன்பதாவது அல்லது பத்தாவது இடத்திணை பிடித்து வெளியேறுவது என்பது நல்லதல்ல. இந்த தொடரில் நாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். இனி சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement