தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டர்பன் நகரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்து தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இளம் அணி பெற்ற வெற்றி அனைவரது மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
நான் சதம் அடிக்க இதுதான் காரணம் :
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வீரரான சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஏனெனில் இந்த போட்டியில் 50 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்சர் என 107 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த அதிரடி காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 141 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த சஞ்சு சாம்சன் தனது அதிரடியான ஆட்டம் குறித்து பேசுகையில் கூறியதாவது : உண்மையிலேயே நான் இன்று விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளில் தற்போது உள்ள ஃபார்மை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு ரண்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த வகையில் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்து ரன்களை குவிக்க முயற்சித்தேன். எப்பொழுதுமே ஒரு வீரர் 3-4 பந்துகள் களத்தில் நின்றால் அடுத்து பவுண்டரி அடிக்க தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. நல்ல பந்து கிடைத்தால் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : இந்திய அணியிடம் நாங்க தோற்க அவர் ஒருவர்தான் காரணம்.. தோல்விக்கு பிறகு – எய்டன் மார்க்ரம் வருத்தம்
அந்த வகையில் இன்று என் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணி தங்களுக்கு சாதகமான சொந்த மண்ணில் விளையாடுவதால் பலமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் அவர்களை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.