சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது தென்னாப்பிரிக்க அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டர்பன் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் இந்திய அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது.
ஒரே ஒருத்தர் எங்களை வீழ்த்தி விட்டார் :
இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்து அசத்தியது.
பின்னர் தொடர்ந்து விளையாடி தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : டாசில் வெற்றி பெற்று நாங்கள் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததெல்லாம் தவறு கிடையாது. இரண்டு அணியிலும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது.
ஆனால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார். அவரது ஆட்டம் காரணமாக எங்களது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகரித்தது. அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் கோட்சே மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.
இதையும் படிங்க : 10 வருஷமா இதுதாகத்தான் போராடினாரு.. வெற்றிக்கு பின்னர் சஞ்சு சாம்சனை பாராட்டிய – சூர்யகுமார யாதவ்
இந்த போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம். நிச்சயம் இந்து தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என எய்டன் மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.