
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக முன்வந்தார். அதன் காரணமாக மினி ஏலத்திற்கு முன்னரே அவரை அணிக்குள் கொண்டுவர டிரேடிங் முறையில் பல அணிகள் சஞ்சு சம்சனுக்காக கடுமையான போட்டியை நிகழ்த்தியது.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. அப்படி சிஎஸ்கே அணியில் இணைந்த சாம்சன் ஆரம்ப கட்ட போட்டிகளில் தடுமாறினார்.
இருப்பினும் தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை தான் விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதம் என 402 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அனுபவ வீரரான சஞ்சு சாம்சன் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் இருந்து வந்ததால் சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு செல்லும் என்று ஆரம்பத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தோனி, ருதுராஜுக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவி சாம்சன் கையில் வரும் என்று பலரும் கூறி வரும் வேளையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவி குறித்து சஞ்சு சாம்சன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் உண்மையை சொல்லப்போனால் தற்போது ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும்போது அங்கு பல நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க கூடாது என்பதை கற்றுக் கொண்டுள்ளேன் என்று எளிமையாக அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : மிகச்சிறப்பான சாதனையுடன் வெற்றியை பதிவுசெய்த குஜராத் அணி – புள்ளிபட்டியலில் பெரிய ஜம்ப்
அவர் அப்படி கூற காரணம் யாதெனில் : ஒரு அணிக்குள் புதிதாக வரும்போது எடுத்த முதல் படியிலேயே கேப்டன் பொறுப்பை கேட்கக்கூடாது என்றும் சில காலம் கழித்து நிர்வாகம் விரும்பினால் கேப்டன்சி செய்ய தயாராக இருப்பதாகவும் சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.