ஒரே ஓவரில் 24 ரன்கள். புவனேஷ்வர் குமாரை பிரித்து எடுத்த சாம்சன் – வீடியோ

Samson
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி வீரரான சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதில் குறிப்பாக புவனேஷ்வர் குமார் வீசிய 18 ஓவரை ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என தெறிக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் வீசிய அந்த ஓவரை சாம்சன் எதிர்கொண்ட விதம் ராஜஸ்தான் அணி பெரிய இலக்கினை எட்ட உதவியது. இருப்பினும் சன் ரைசர்ஸ் அணி வீரரான டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டம் காரணமாக சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 8 ஆவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 198 ரன்களை அடித்தது. அந்த அணி சார்பாக சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்களை அடித்தார். மேலும், கேப்டன் ரஹானே 70 ரன்களை அடித்தார்.

Srh

இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட துவங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்து. இதனால் பின்னால் வந்த வீரர்கள் எளிமையாக வெற்றிக்கான இலக்கினை அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 69 ரன்களும், பேர்ஸ்டோ 45 ரன்களையும் குவித்தனர்.

Advertisement