இவரும் சொதப்ப ஆரம்பிச்சிட்டாரா ? அப்போ நிச்சயமா ராஜஸ்தான் கதை அவ்ளோ தான் – விவரம் இதோ

RR

இந்த ஆண்டு தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு அதிரடியான முடிவை மேற்கொண்டது. கேரளாவைச் சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுத்தது. நல்ல டீம் ஆக அமைந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு நல்ல வகையில் பெர்பார்ம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வருகிறது. ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர் தற்பொழுது விளையாட முடியாத காரணத்தினால், அந்த அணிக்கு பவுலிங்கில் மிகப்பெரிய பலத்தினை இழந்துள்ளது.

மேலும் ஸ்டோக்ஸ் தனது விரலை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இதையெல்லாம்விட கேப்டன் சஞ்சு சாம்சன் சரியான ஃபார்மில் இல்லாமல் இருப்பது அந்த அணியை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சஞ்சு சம்சன் ஒரு மிக அதிரடியான வீரர் அதுமட்டுமின்றி மிகவும் ஸ்டைலாக அனைத்து பந்துகளையும் அடிப்பார். அவருக்கு இந்திய அணியில் கூட ஒரு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். ஐபிஎல் தொடரில் கூட ஒரு இரண்டு மூன்று போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுவார் அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய அளவில் சொதப்பிவிடுவார் அதேபோல இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 119 ரன்கள் குவித்தார்.

Samson-1

அதன் பின்னர் நடந்த இரு போட்டிகளில் 10 ரன்கள் கூட அவர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போத இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே அணியில் ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இல்லை. மேலும் சாம்சன் தற்பொழுது சொதப்பி வருவது அந்த அணியை மிகப்பெரிய வேதனைக்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

Samson-1

அந்த அணியில் தற்போது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஜோஸ் பட்லர் தான். ஆனால் அவரை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து போட்டிகளிலும் வென்று விட முடியாது என்பது அந்த அணிக்கே தெரியும். எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் அணியாக வெளியேறிவிடும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.