கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தவறு.. சஞ்சு சாம்சன் அரையிறுதி போட்டியில் நீக்கமா? – ஐ.சி.சி சொல்வது என்ன?

Sanju Samson
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதனால் அந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் இருந்து நீக்கமா? :

பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டது. சற்று கடினமான இந்த இலக்கினை துரத்திய இந்திய அணியானது 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்திருந்தார். அதனால் எதிர்வரும் போட்டிகளிலும் அவர் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படும் வேளையில் அவர் அரையிறுதி போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐசிசி என்ன சொல்கிறது? என்பதையும் இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் சஞ்சு சாம்சன் பேட்டை தரையில் வைத்துவிட்டு ஹெல்மெட்டை கழற்றி எறிந்து தனது வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இப்படி கிரிக்கெட் உபகரணங்களை மைதானத்தில் சேதப்படுத்துவது ஐசிசி விதிமுறைகளின் படி குற்றமாகும். ஆனாலும் அவர் வெற்றி கொண்டாட்டத்தில் இதை வெளிப்படுத்தியதால் அம்பயர்கள் பெரியளவிற்கு அவர் மீது குற்றம் செலுத்த மாட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : உலகின் தலைசிறந்த 2 டி20 பவுலர்கள் இவர்கள்தான்.. இது என்னோட கருத்து – கிளென் மெக்ராத்

அப்படியே குற்றம் நிரூபிக்க பட்டாலும் அவருக்கு ஒரு தகுதி நீக்க புள்ளி மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. 24 மாதங்களுக்குள் 4 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றால் தான் ஒரு போட்டியிலிருந்து அந்த குறிப்பிட்ட வீரர் நீக்கப்படுவார். எனவே சஞ்சு சாம்சன் அரையிறுதி போட்டியில் விளையாடுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Advertisement