அவர் என்ன தப்பு செஞ்சாரு, ரிஷப் பண்ட்டுக்கு பதில் அவரை செலக்ட் பண்ணிருக்கணும் – பாக் வீரர் அதிருப்தி

Rishabh Pant Sanju Samson
Advertisement

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக மும்முரமாக தயாராகி வரும் முன்னணி கிரிக்கெட் அணிகள் தங்களது 15 பேர் அணியை அறிவித்து வருகின்றன. அதில் முதலாவதாக நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தங்களது அணிகளை அறிவித்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் இடம் பிடித்துள்ள அந்த அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் திரும்பியுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார். மேலும் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Rishabh Pant

ஆனால் முதன்மை அணியில் இடம் பிடித்திருக்க வேண்டிய தீபக் சஹர், முகமத் ஷமி ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் அறிமுகமான 2018 முதல் இதுவரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளில் விளையாடி சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது. அதிலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பண்ட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் வெற்றியை பெற்று கொடுக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத போதிலும் எதன் அடிப்படையில் மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார் என்பது ரசிகர்களுக்கு குழப்பமாக இருக்கிறது.

- Advertisement -

பாவமான சாம்சன்:
அதைவிட 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடிய சஞ்சு சாம்சன் சமீப காலங்களில் தொடர்ச்சியான வாய்ப்புகள் பெறவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட தவமாய் காத்துக் கிடக்கிறார். ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் சமீபத்திய அயர்லாந்து தொடரில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sanju Samson

ஆனாலும் அதன்பின் நடந்த இங்கிலாந்து தொடரில் கழற்றிவிடப்பட்ட அவர் அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருப்பதால் இந்த டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் பழைய பஞ்சாங்கத்தை போல் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு சஞ்சு சாம்சனை ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்காமல் மீண்டும் அநீதி இழைத்து கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

நியாயமே இல்ல:
இந்நிலையில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாதது அநீதி என்று தேர்வுக் குழுவை சாடியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் போன்றவர்க்கு இது அநீதியாகும். அவர் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த அணியில் இடம் பிடிக்காத அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? அது கூட பரவாயில்லை விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். நானாக இருந்திருந்தால் ரிஷப் பண்ட்க்கு பதில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருப்பேன்” என்று கூறினார்.

Kaneria

ஓப்பனிங் பொறுப்பு:
மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த கேஎல் ராகுல் ரோஹித் சர்மாவுடன் இணைந்து பெரிய ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும் என்று தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக்கை ஸ்டேண்ட் பை வீரராக தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது.

- Advertisement -

“என்னை கேட்டால் உம்ரான் மாலிக்கை ஸ்டேண்ட் பை வீரராக தேர்வு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற அதிகப்படியான வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக வலைப்பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க : உங்கள திருத்த முடியாது, மீண்டும் மீண்டும் பண்ட்டை செலக்ட் பண்ணி தப்பு பண்றிங்க – முன்னாள் பாக் வீரர் அதிருப்தி

அதே சமயம் டாப் ஆர்டரில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பெரிய ரன்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த நிலைமையை உலக கோப்பையிலும் ஏற்படும்” என்று கூறினார்.

Advertisement