உங்கள திருத்த முடியாது, மீண்டும் மீண்டும் பண்ட்டை செலக்ட் பண்ணி தப்பு பண்றிங்க – முன்னாள் பாக் வீரர் அதிருப்தி

Rishabh Pant
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எந்த மாற்றமும் நிகழாமல் சில ஏமாற்றங்கள் தான் கிடைத்துள்ளது என்று கூறலாம். காரணம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார் என்பதை விட ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதே ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது.

ஏனெனில் 2018இல் அறிமுகமான அவர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சதமடித்து சில சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தோனியை மிஞ்சி சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதால் தேவைக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மீண்டும் தேர்வு:
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் விளையாடியுள்ள அவர் ஒருமுறை கூட மனதில் நிற்கும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்காமல் 934 ரன்களை 23.95 என்ற சுமாரான சராசரியில் எடுத்து மோசமாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தொடர்ச்சியாக அணி நிர்வாகமும் கேப்டனும் இவருக்கு வாய்ப்பளித்து வருவதற்கு கடந்த சில வருடங்களாகவே நிறைய ரசிகர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் இவருக்காக இவரை விட உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட தவமாய் காத்துக்கிடக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது. அத்துடன் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று ரசிகர்கள் எப்போதும் சொல்வதில்லை ஆனால் முக்கிய நேரத்தில் குருட்டுத்தனமாக ஷாட் அடித்து வாய்ப்பை வீணாக்கும் அவரை சில போட்டிகளில் அதிரடியாக நீக்கி வாய்ப்பின் அருமையை உணர்த்த வேண்டும் என்று தான் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை”

“மேலும் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வு செய்ததில் எந்த பயனுமில்லை. அதற்கு பதிலாக எக்ஸ்ட்ரா பவுலரை சேர்த்திருக்க வேண்டும்” என்று கூறினார். அதாவது சமீபத்திய ஆசிய கோப்பையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டாலும் ரிஷப் பண்ட் விளையாடியதாக தெரிவிக்கும் டேனிஷ் கனேரியா டி20 உலகக் கோப்பையிலும் அதேபோல் கண்துடைப்புக்காக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நடக்கப்போகும் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ஆனால் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷப் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து அந்த இடத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பந்து வீச்சாளரை தேர்வு செய்வதே சரியான முடிவாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டாலும் 11 பேர் அணியில் விளையாடுவதை பார்ப்பது கடினம் எனக்கூறும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு முன்பாக 2 டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி – வீரர்களின் பட்டியல் அறிவிப்பு

“ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் தான் பொருந்துவர்கள் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் நிறைய போட்டிகளில் வாய்ப்பு பெற மாட்டார் என்று நினைக்கிறேன். அதே சமயம் அஷ்வினுக்கு பதில் ரவி பிஷ்னோயை தேர்வு செய்திருந்தால் நல்ல முடிவாக இருக்கும். ஒருவேளை அனுபவத்துக்காக அஷ்வினை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல இந்தியா நினைத்தால் அவரை ஸ்டேண்ட் பை வீரராக அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement