டி20 உலககோப்பைக்கு முன்பாக 2 டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி – வீரர்களின் பட்டியல் அறிவிப்பு

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பை அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளனர்.

Bhuvneshwar Kumar

- Advertisement -

அவர்களை தவிர்த்து சில மாற்றங்களாக பும்ரா ஹர்ஷல் பட்டேல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் சாகர் முகமது ஷமி, ரவி பிஷ்னாய் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கூடுதல் வீரர்களாக உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. முதலில் வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் உலகக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களே கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர்.

IND

அதற்கு அடுத்து தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியானது t20 உலக கோப்பையில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த ஒரு சில நாட்களிலேயே இந்திய அணி ஆஸ்திரேலிய பயணிக்க இருப்பதால் அந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

அதன்படி பிட்னஸை கருத்தில் கொண்டு புவனேஷ்வர் குமார் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் அந்த தொடரில் பங்கேற்று விளையாடுவார்கள். அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீரர்களின் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : முகமது ஷமி ஸ்டான்ட் பை வீரராக சேர்க்கப்பட இதுவே காரணம் – வெளியான தகவல்

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.

Advertisement