இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் தனது நிலையான இடத்திற்காக போராடி வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டே அறிமுகமாகி இருந்தாலும் இத்தனை ஆண்டுகளில் அவர் வெறும் 30 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். திறமைக்கு ஏற்ப அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரசிகர்களும் அவரது நிலை குறித்து ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரின் போது இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக வருத்தம் அடைந்த ரசிகர்கள் இனியாவது தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை டி20 தொடரில் இடம் பிடித்த அவருக்கு முதல் போட்டியின் போது வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்து வலி ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்க சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சாம்சன் ஆட்டம் இழந்து இருந்தார். இந்நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய போட்டியிலும் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்கையில் மூன்றாவது வீரராக களத்திற்குள் வந்த சஞ்சு சாம்சன் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து மீண்டும் ஒருமுறை டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் தற்போது ரசிகர்களே அவர் மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : 3வது டி20யில் தோற்க இதான் காரணம்.. ஒன்டே சீரிஸ்ல பசங்க பதிலடி கொடுப்பாங்க.. இலங்கை கேப்டன் நம்பிக்கை
அதாவது இனி உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான். “ஹேப்பி ரிட்டயர்மென்ட் சஞ்சு சாம்சன்” என்று ரசிகர்களே தங்களது ஏமாற்றத்தை அவர் மீது தெரிவித்து வருகின்றனர். என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் உங்கள் வசம் இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஏமாற்றத்தினை தங்களது கருத்துக்களாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



