என்னது நான் அடுத்த தோனியா ? உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு சொல்லணும் – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

Samson

ஐபிஎல் தொடரில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எப்போதும் நன்றாக விளையாடும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்றவர்கள் புள்ளி பட்டியலில் தற்போது அதலபாதாளத்தில் இருக்கின்றனனர். அதே நேரத்தில் மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தற்போது வரை பெரிதாக சாதிக்கவில்லை.

Samson

விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் எல்லாம் கடந்த பல வருடங்களில் நன்றாக விளையாடியவர்கள் இந்த வருடம் பெரிதாக தங்கள் செயல்பாடுகளை காட்டவில்லை .

ஆனால் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், மயாங்க் அகர்வால், கே எல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திவாத்தியா, முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் போன்ற பல வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 72 ரன்களும், 45 பந்துகளில் 84 ரன்களை அடித்திருந்தார்.

இதன் காரணமாக அடுத்த தோனி இவர்தான் என்ற பேச்சுக்களும் வந்து கொண்டிருந்தது இதனை அறிந்த சஞ்சு சாம்சன் உடனடியாக இதற்கு பதிலளித்து உள்ளார். அவர் கூறுகையில்… நான் எப்போதும் என்னை தோனியாக நான் நினைத்ததில்லை. தோனி உலகில் ஒருவர் தான் அவரைப் போல் யாரும் வர முடியாது மேலும் அவர் இடத்தை இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது.

- Advertisement -

Samson

ஆனால் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் நாம் தோனியாக ஆட நினைத்து ஆடினால் நம்மை நாம் இழந்துவிடுவோம். நாம் நமது தனித்தன்மையுடன் ஆடவேண்டும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எப்போதும் என்னை நான் தோனியாக நினைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.