RR vs DC : தவறு செய்து விட்டு களத்தில் ரஹானேவை முறைத்த சஞ்சு சாம்சன் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Samson
- Advertisement -

நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டெல்லி அணி பந்துவீசியது. அதன்படி ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ரஹானே பந்தை அடிக்க எதிர்முனையில் இருந்த சாம்சன் பந்து எங்கே செல்கிறது என்று கூட பார்க்காமல் கண்மூடித்தனமாக ஓடிவந்தார். ரஹானே நில் நில் என்று சொல்லியும் ஓடி வந்து ரன் அவுட் ஆனார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இவர் பார்க்காமல் ஓடி வந்து அவுட் ஆகிவிட்டு ரஹானேவை திட்டி முறைத்து புலம்பியபடி வெளியேறினார். பட்லர் இல்லாத குறையை நேற்று தீர்த்த ரஹானே அருமையான சதம் ஒன்றை விளாசினார். ஆனால், இறுதியில் அதிர்ஷ்டவசமின்றி ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Advertisement