- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடிச்சா செஞ்சுரி.. இல்லனா டக்.. தென்னாப்பிரிக்க தொடரில் மெகா சாதனையை நிகழ்த்தி – சஞ்சு சாம்சன் அசத்தல்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து தொடர்ச்சியாக துவக்க வீரருக்கான வாய்ப்பினை பெற்று வரும் சஞ்சு சாம்சன் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் நடைபெற்று முடிந்த வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க தொடரில் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனைகள் :

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் சதம் அடித்த அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் ரன் எடுக்காமல் டக் அவுட்டாகியிருந்தாலும் நேற்று நடைபெற்று முடிந்த நான்காவது போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் கரியரில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதாவது நேற்று அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக காலிங் முன்ரோ, பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரே ஆண்டில் இரண்டு டி20 சதங்களை அடித்து இருந்தனர்.

அந்த சாதனையை நேற்று சஞ்சு சாம்சன் தகர்த்திருந்தார். அதேபோன்று இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் சதம் அடித்த திலக் வருமாவும் ஒரே ஆண்டில் இரண்டு சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒரே டி20 தொடரில் இரண்டு சதங்களை விளாசிய வீரராகவும் சஞ்சு சாம்சன் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் இந்த தொடரில் இரண்டு டக் அவுட்டானதின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக முறை டாக் அவுட்டான வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இப்படி அடித்தால் சதம் இல்லை என்றால் டக் என இந்த தொடர் அவருக்கு மிகச் சிறப்பாக சென்றுள்ளது.

இதையும் படிங்க : இந்த தொடரில் என்னோட பிளான் இதுதான்.. அதனால தான் ஈசியா விக்கெட்டுகளை எடுத்தேன் – வருண் சக்ரவர்த்தி

அதோடு டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், வெளிநாட்டில் டி20 சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் சஞ்சு சாம்சன் நிச்சயம் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -