வீடியோ : பந்தை தவறவிட்டு அடிவாங்கிய சாம்சன். வலிச்சாலும் வெளிய காட்டிக்காம சிரிக்குறாரு பாருங்க

samson

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் பட்லர்(41) மற்றும் சாம்சன்(42) ஆகியோரது உதவியால் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.

sanju

மும்பை அணி சார்பாக ராகுல் சாகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா(14) மற்றும் சூர்யகுமார் யாதவ்(16) ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் டிகாக்(70) மற்றும் க்ருனால் பாண்டியா(39) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக 18.3 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடிய மும்பை அணி இரண்டாவது ஓவரை விளையாடிக் கொண்டிருக்கும்போது ஜெய்தேவ் உணத்கட் ரோஹித் சர்மாவுக்கு எதிராக அந்த ஓவரை வீசினார். ரோகித் சர்மாவுக்கு எதிராக ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார்.

அந்த பந்தினை ரோகித் சர்மா அடிக்க முயன்று பின்னர் அதனை விட்டார். அந்த பந்து ரோகித் சர்மாவை தாண்டியதும் ஸ்விங் ஆகி சென்று சாம்சன் தொடைப்பகுதியில் பலமாக தாக்கியது. அந்தப் பந்தை பிடிக்க தவறிய சாம்சன் தொடையில் அடி வாங்கினார். பந்து பட்டதும் வலியை தந்தாலும் சிரித்தபடி அதனை சமாளித்த சாம்சன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ :

- Advertisement -