
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலிங் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 42 ரன்களையும் குவித்தனர். பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது :
துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.1 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களையும், சஞ்சு சாம்சன் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடரில் எங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. பந்துவீச்சு யூனிட்டை பொறுத்தவரை சில முக்கிய பந்துவீச்சாளர்களை நாங்கள் இழந்திருந்தாலும் ஆகாஷ் மத்வால் மிகச் சிறப்பாக பந்துவீசினார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை முமென்டம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதனை நமது பக்கம் திருப்பினால் வெற்றி நிச்சயம் அந்த வகையில் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் வெற்றி பெற்றுள்ளோம். எங்களது அணியில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி பற்றி பேச வார்த்தைகளே இல்லை. அவருடைய ஆட்டம் அற்புதமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் நகரில் அவர் அடித்த சதம் மிகச் சிறப்பான ஒன்று.
இதையும் படிங்க : தோல்விக்கு இதான் காரணம்.. ப்ரேவிஸ் மாதிரி சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு இதான் என் அட்வைஸ்.. தோனி பேட்டி
இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை மிடில் ஓவர்களில் வெளிப்படுத்தியிருந்தார். அதோடு அவர் அனைத்து பந்துகளையும் ஏனோ தானோ என்று அடிக்கவில்லை அவர் ப்ராப்பராக பேட்டிங் செய்கிறார். இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் என சஞ்சு சாம்சன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.