சி.எஸ்.கே அணிக்கு எதிராக சாம்சனின் வெறியாட்டத்திற்கு இதுவே காரணம் – இப்படி ஒரு பிராக்டீஸா ?

Samson-1
- Advertisement -

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் 2013ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். அவருக்கு பெரும் ஆதரவை கொடுத்து தற்போது வரை வளர்த்து வருகிறது.

Samson

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது சிக்சர்கள் அடித்து துவம்சம் செய்தார். இவர் ஆட்டத்தின் காரணமாக சென்னை ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது முதல் தற்போது வரை சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும் சாம்சனின் இந்த ஆட்டத்திற்கு காரணம் ஊரடங்கு நேரத்தில் தான் பயிற்சி எடுக்க தனக்கு பந்துவீசிய ராய்கி கோமஸ் தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிக்கலாக அமைந்தது.

சஞ்சு சாம்சனால் சரியாக பயிற்சிக்கு செல்ல முடியவில்லை, அதனால் நானும் அவனும் எங்களது வீட்டு மொட்டை மாடியில் பயிற்சி மேற்கொண்டோம். அதில் அவருக்கு பவுன்சர், லென்த் என வெரைட்டி வெரைட்டியாக பந்துகளை வீசி சுமார் 20,000 பந்துகள் வீசி இருப்பேன் இதில் நல்ல பந்துகளை தடுத்து அதை நன்றாக பயிற்சி மேற்கொண்டார்.

Smith

மேலும் சற்றும் மோசமான பந்துகளை அவர் விளாசினார். இப்படி ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை பயிற்சி செய்வோம் இப்படித்தான் தற்போது சஞ்சு சம்சன் அடித்து நொறுக்கி பட்டையை கிளப்பி வருகிறார் என்று தெரிவித்துள்ளார் ராய்கி கோமஸ்.

Advertisement