அடித்து ஆடும் அவருக்கு வாய்ப்பு குடுக்காம. ஷார்ட் பால்ல அவுட் ஆகும் இவருக்கு போய் சேன்ஸ்ஸா? – ரசிகர்கள் கேள்வி

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆரம்பத்தில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் கலந்து கொண்ட இந்திய அணியே இம்முறையும் ஆசிய கோப்பையை தக்க வைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் “சூப்பர் 4” சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐசிசி செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உலகக் கோப்பை அணிகளை அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்ததால் இன்று செப்டம்பர் 12-ஆம் தேதி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.

இன்று மாலை வெளியிடப்பட்ட இந்த இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே உலகக்கோப்பை தொடருக்கும் தேர்வாகியுள்ளனர். இதில் மூன்று முக்கிய மாற்றங்களாக ஜடேஜாவிற்கு பதில் அக்சர் பட்டேலும் ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக இடம் பெறாத ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் அணிக்குள் இணைந்துள்ளனர். அவர்களை தவிர்த்து பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் கிடையாது.

Sanju Samson IND VS ZIM

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஸ்டான்ட் பை வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் சமீப காலமாகவே ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆட்டம் இழந்து வருவதால் அனைத்து எதிரணிகளும் அவர் பேட்டிங்கிற்கு வந்தாலே ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச ஆரம்பித்து விடுகின்றன.

- Advertisement -

இப்படி ஒரு வெளிப்படையான வீக்னெஸ் இருப்பது தெரிந்தும் இந்திய அணி அவரை தேர்வு செய்துள்ளது. அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் சரி, சமீப காலமாக இந்திய அணியிலும் சரி தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் தோற்ற விரக்தியில் இந்திய நிரூபரிடம் அத்து மீறிய ரமீஸ் ராஜா – வைரல் வீடியோவால் கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் பயமின்றி அடித்து ஆடும் தன்மை உடைய சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடியவர். எனவே அவரை விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement