
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று இந்தியா அசத்தியது. இதை அடுத்து இந்தியா தங்களுடைய சூப்பர் 4 சுற்றுகள் முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தான் அணியை துபாயில் எதிர்கொள்கிறது.
முன்னதாக இத்தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதனால் ஓப்பனிங்கில் களமிறங்கி 3 சதங்கள் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 3 சதங்கள் அடித்து ஓரளவு சிறப்பாக விளையாடிய அவருக்கு கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளனர்.
அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பைப் பெறாத சாம்சன் ஓமனுக்கு எதிரானப் போட்டியில் களமிறங்கினார். அப்போட்டியில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 38 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கவில்லை. அப்போது நங்கூரமாக விளையாடிய சாம்சன் 56 ரன்கள் அடித்து ஆசிய டி20 கோப்பையில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் அனைவருக்கும் சமமான வாய்ப்பையும் சுதந்திரமாக விளையாடுவதற்கான ஆதரவைக் கொடுத்துள்ளதாக சாம்சன் கூறியுள்ளார். அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிகரமாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சாம்சன் பேசியது பின்வருமாறு.
“எங்களுடைய அணியின் சூழலை சிறப்பாக வைத்திருப்பதற்காக சூர்யா மற்றும் கௌதம் பாய் ஆகியோருக்கு நான் நிறைய பாராட்டுகளைக் கொடுக்க வேண்டும். இங்கே மிகவும் குளிர்ச்சியான சமமான சூழல் நிலவுகிறது. அனைவரும் மிகவும் சமமாக நடத்தப்படுகின்றனர். அனைவருக்கும் எங்கள் அணியில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது”
இதையும் படிங்க: ஐகியூ இல்லாத ஆளுங்கக்கிட்ட பேசி பயனில்ல.. சூரியகுமாரை மட்டமாக பேசிய யூசுப்புக்கு.. அஸ்வின் பதிலடி
“அதுவே உங்களிடமிருந்து உங்களின் உங்களுடைய சிறந்த செயல்திறனைக் கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். களத்தில் சுதந்திரமாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்தப் போட்டியில் கொஞ்சம் விளையாடும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். எங்களுடைய ஊரில் சில போட்டிகளில் விளையாடினாலும் நாட்டுக்காக ஆசியக் கோப்பையில் களத்தில் விளையாடுவது உண்மையிலேயே உதவியாக இருந்தது. எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் தங்களுடைய சொந்த செயல்திறன் மேலே பொறுப்பும் அக்கறையும் கொண்டுள்ளனர். அதே சமயம் அணியின் வெற்றிக்காகவும் பங்காற்றுகின்றனர்” என்று கூறினார்.