ஐகியூ இல்லாத ஆளுங்கக்கிட்ட பேசி பயனில்ல.. சூரியகுமாரை மட்டமாக பேசிய யூசுப்புக்கு.. அஸ்வின் பதிலடி

R Ashwin 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. அதே போல இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அசத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லீக் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணியினர் கை கொடுக்காதது சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டாஸ் வீசிய பின்பும் போட்டி முடிந்த பின்பும் பாகிஸ்தான் வீரர்களிடம் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைகுலுக்காமல் புறக்கணித்தனர்.

- Advertisement -

மட்டமான விமர்சனம்:

அதனால் ஜென்டில்மேன்களாக நடந்து கொள்ளாத இந்திய அணியினரை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதன் உச்சமாக இந்திய கேப்டன் சூரியகுமாரை சுவர்யகுமார் அதாவது பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் விமர்சித்தார். மேலும் நடுவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போதுமான ஐகியூ அதாவது நுண்ணறிவு இல்லாத நபர்களிடம் பேசுவதில் பயனில்லை என்று அவருக்கு முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “நானும் ஒரு கிரிக்கெட்டர். இன்று எனக்கு கிடைக்கும் அன்பு மற்றும் மரியாதை அனைத்தும் களத்தில் நான் செய்தவற்றால் கிடைத்ததாகும்”

- Advertisement -

அஸ்வின் பதிலடி:

“சில நேரங்களில் நாம் எல்லைக் கடந்து பேசுவோம். அவற்றை நாம் வல்லுனர்களிடமே விடுவது நல்லது. நாம் புரிந்து கொள்ளாத இடத்தில் காலை வைத்தால் அழுக்காகி விடுவோம். சமீபத்தில் எனது வாழ்நாள் முழுவதும் வைத்துக்கொள்ள விரும்பும் அளவுக்கு ஒரு அழகான கருத்தைப் படித்தேன். அது உங்களுடைய நுண்ணறிவு அளவுக்கு குறைவாக இருக்கும் மக்களுடன் வாதிடாதீர்கள் என்பதாகும்”

இதையும் படிங்க: 20 ஓவர்கள் மீதம் வைத்து 226 ரன்ஸ் சேசிங்.. குண்டு, திரிவேதி அசத்தலில் ஆஸியை வெளுத்த இளம் இந்தியா

“ஏனெனில் அவர்களை உங்களை தங்கள் அளவுக்கு இழுத்து அவர்களது அனுபவத்தை வைத்து வீழ்த்துவார்கள். அவர்கள் எப்போதும் உங்களுடைய அளவுக்கு வரமாட்டார்கள். ஏனெனில் உங்களிடம் பொதறிவு இருக்கும். அப்படிப்பட்ட நீங்கள் அவர்களுடைய அளவைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் உங்களது வாழ்வில் தோற்பீர்கள். இதை மட்டுமே நான் சொல்வேன். உண்மை என்னவெனில் நாம் வலுவான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாம் அதனுடன் இருந்தால் போதும். இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சூப்பர்பவர் நாடு. அதை நாம் தொடர்ந்து கட்டமைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement